முள்ளி என்பது நீர்முள்ளி.
1. சொல் பொருள்
(பெ) 1. நீர்முள்ளி, ஆற்று முள்ளி, 2. முட்செடி
2. சொல் பொருள் விளக்கம்
முட்செடிவகை. இத்தாவரமானது இக்குரம், காகண்டம், துரகதமூலம், பாண்டுசமனி, முண்டகம், சுவேதமூலி, நிதகம் போன்ற பல்வேறு பெயர்களைக் கொண்டது. நீர் ஆதாரம் உள்ள இடங்களில் வளரும் முட்செடி என்பதால் ‘நீர்முள்ளி’ என்ற பெயர் பெற்றது
இதன் இலைகள் ஈட்டி வடிவமுடையவை. இதன் கணுக்களில் அணில் பற்களைப் போன்ற வெள்ளை நிற நீண்ட முட்கள் காணப்படும். இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் விதைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும். முட்களைக் குறிக்கும் வகையில் ‘முண்டகம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
இதன் தண்டுப்பகுதியில் சிறு முடிகள் காணப்படும்.
மொழிபெயர்ப்புகள்
marsh barbel • Bengali: স্হুলমর্দন shulamardan • Gujarati: એખરો ekharo, કાંટા શેરિયો kanta sheriyo, તાલીમખાના talimkhana • Hindi: भानकरी bhankari, गोक्षुर gokshur, कोकिल आंख kokil-ankh, क्षुर kshur, ताल मखाना tal makhana, त्रिकट trikat, त्रिवर्णक trivarnak • Kannada: ಗೋಕಣ್ಟಕ gokantaka, ಗೋಕ್ಷುರ gokshura • Konkani: कोळसुंदो kolsundo • Malayalam: bahel-schulli • Marathi: एखरा ekhara, गोक्षुर gokshura, कोळिस्ता kolista, कोळसुंदा kolsunda, सरांटा saranta, तालीमखाना talimkhana • Oriya: କୋଇଲିଖିଆ koilikhia • Punjabi: ਤਾਲਮਖਾਣਾ talmakhana • Sanskrit: कोकिलाक्षः kokilaksah • Tamil: நீர்முள்ளி nir-mulli • Telugu: ఏనుగు పల్లేరు enugu palleru, కోకిలాక్షి kokilaksi, వనశృంగాటము vana-sringatamu
3. ஆங்கிலம்
Asteracantha Longifolia, Hygrophila spinosa, Hygrophila auriculata?
thorny plant,
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
இது நீர்வளம் மிக்க மருத நிலத்தில் காணப்படுவது. தண்டுகளில் முள் உள்ளது. பூக்களின் இதழ்கள் முன்பக்கம் மடங்கியிருக்கும். பூக்கள் நீல நிறத்தில் இருக்கும். முள் சினை முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி கொடும் கால் மா மலர் கொய்து கொண்டு – பெரும் 214-216 முள்ளையுடைய கொம்புகளையுடைய அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின் வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, முள்ளி நீடிய முது நீர் அடைகரை – ஐங் 21/1 முள்ளிச் செடிகள் உயரமாக வளர்ந்துள்ள பழமையான நீரினைக் கொண்ட திண்ணிய கரையில் அள்ளல் ஆடிய புள்ளி களவன் முள்ளி வேர் அளை செல்லும் ஊரன் – ஐங் 22/1,2 சேற்றில் துளாவித் திரிந்த புள்ளிகளையுடைய நண்டு முள்ளிச் செடியின் வேர்ப்பகுதியில் உள்ள வளையில் சென்று தங்கும் ஊரினைச் சேர்ந்த தலைவன் கூன் முள் முள்ளி குவி குலை கழன்ற மீன் முள் அன்ன வெண் கால் மா மலர் பொய்தல் மகளிர் விழவு அணி கூட்டும் – அகம் 26/1-3 வளைவான முள்ளை உடைய முள்ளிச் செடியின் குவிந்த குலையிலிருந்து கழன்று விழுந்த மீனின் முள்ளைப் போன்ற வெண்ணிற காம்புகளையுடைய கரிய மலர்களை, விளையாட்டு மகளிர் தமது திருவிழா ஆட்டத்துக்கு அழகுசெய்ய எடுத்துச் சேர்க்கும் கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் – புறம் 363/10,11 கள்ளிகள் பரந்து மூடிய முட்செடிகள் நிறைந்த முதுகாட்டில் வெள்ளிடையே ஓங்கிய அகன்ற இடத்தின்கண்
முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி/கொடும் கால் மா மலர் கொய்து கொண்டு அவண - பெரும் 215,216 முள்ளி நீடிய முது நீர் அடைகரை - ஐங் 21/1 முள்ளி வேர் அளை செல்லும் ஊரன் - ஐங் 22/2 முள்ளி வேர் அளை களவன் ஆட்டி - ஐங் 23/1 கூன் முள் முள்ளி குவி குலை கழன்ற - அகம் 26/1 மணி மருள் மலர முள்ளி அமன்ற - அகம் 236/1 கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு - புறம் 363/10 பெருவாயின் முள்ளி என்பான் - ஆசாரக்:101/6 முள்ளி தேன் உண்ணுமவர் - பழ:274/4
முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து - தேவா-சம்:2815/1 பிதிர்ந்த முள்ளி சிதைந்த வள்ளி பிளந்த கள்ளி பரந்தவே - கலிங்:77/2 கள்ளியும் கடம்பும் முள்ளியும் முருக்கும் - உஞ்ஞை:52/41 கரி பரந்து எங்கும் கடு முள்ளி பம்பி - முத்தொள்:22/1
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்