சொல் பொருள்
(பெ) பூவில், புறவிதழ் ஒடித்த முழுப் பூ / இதழ் ஒடியாத முழுப் பூ
சொல் பொருள் விளக்கம்
பூவில், புறவிதழ் ஒடித்த முழுப் பூ / இதழ் ஒடியாத முழுப் பூ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
entire flower with the calyx removed / with the calyx not removed
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி – குறு 80/1 கூந்தலில் ஆம்பலின் புறவிதழை ஒடித்த முழுப்பூவைச் செறுகி முழுநெறி – புறவிதழ் ஒடித்த முழுப்பூ, இதழொடியாத பூவெனினுமாம் – உ.வே.சா உரை, விளக்கம். கழனி ஆம்பல் முழுநெறி பைம் தழை – அகம் 156/9 கழனியில் பூத்த ஆம்பலின் இதழ் ஒடியாத பூவுடன் கூடிய பசிய தழையுடை முழுநெறி – இதழ் ஒடிக்கப்படாத முழுப்பூ – நாட்டார் உரை, விளக்கம். தீ நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல் – புறம் 116/1,2 இனிய நீரையுடைய பெரிய ஆழ்ந்த சுனைக்கண் பூத்த செங்கழுநீரினது முகை அவிழ்ந்து புறவிதழ் ஒடித்த முழுப்பூவாற் செய்யப்பட்ட தழை அசையும் அல்குலையும் செங்கழுநீரின் முகை அவிழ்ந்து புறவிதழ் ஒடிக்கப்பட்ட பூ ஈண்டு முழுநெறி எனப்பட்டது. இனி, அடியார்க்கு நல்லார், ‘முழுநெறிக் குவளை (சிலப்.2,14) என்றதற்கு இதழ் ஒடிக்கப்படாத குவளை என்ற பொருள்பட, ‘இதழொடிக்கப்படாதெனவே செவ்வி கூறிற்று’ என்று கூறி இவ்வடிகளை எடுத்துக்காட்டினார் – – ஔவை.சு.து.உரை, விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்