சொல் பொருள்
பழமையான மறக்குடியைச் சேர்ந்தவர்,
சொல் பொருள் விளக்கம்
பழமையான மறக்குடியைச் சேர்ந்தவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
person of ancient warrior-tribe
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பீடு பெறு தொல் குடி பாடு பல தாங்கிய மூதிலாளருள்ளும் – புறம் 289/4,5 பெருமை பெற்ற பழைமையான குடியில் பிறந்தாரிடத்து வழிவழியடிப்பட்டு வரும் நற்பண்புகளனைத்தையும் சோர்வுபடாது காத்துவரும் முதுகுடி மறவருள்ளும் தமியன் வந்த மூதிலாளன் அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக திரிந்த வாய் வாள் திருத்தா – புறம் 284/4-7 தனியனாய் வந்த மறக்குடி மறவன் போரில்பகைவரை மேற்செல்லாதவாறு தடுத்து, தான் முன்னேநின்று வாளால் வெட்டி வீழ்த்தின களிறாகிய பிணத்தினது கொம்புகளையே அமைப்பாகக் கொண்டு கோணிய கூரிய வாளை நிமிர்த்துக்கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்