Skip to content

சொல் பொருள்

சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்

அயன், அரி, அரன் என்னும் மூன்று தெய்வங்கள்

திருமால் உருத்திரன் இந்திரன் என்ற மூன்று தெய்வங்கள்

சொல் பொருள் விளக்கம்

சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

The three Tamil kings, namely CEran, COzhan and PAndiyan

The Hindu Trinity.

the three hindu gods, namely
vishnu, siva and Indra

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன் மலை இறந்தே – அகம் 31/14,15

தமிழ்நாட்டினை ஆளும் மன்னர் மூவரும் காக்கும்
தமிழ் மொழியின் வேறான மொழிவழங்கும் தேயங்களின் பல மலைகளையும் கடந்து.

நால் பெரும் தெய்வத்து நல் நகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக – திரு 160-162

நான்காகிய பெரிய தெய்வத்தையுடைய நன்றாகிய ஊர்கள் நிலைபெற்ற
உலகத்தைக் காக்கும் ஒரு தொழிலையே விரும்பிய கோட்பாட்டையுடைய செல்வன்(151)
என முன்னேகூட்டித் திருமாலுக்கு அடையாக்குக.
பலரும் புகழ்கின்ற அயன் அரி அரன் என்னும் மூவரும் தத்தமக்குரிய தொழில்களை முன்புபோல் நிறுத்தித்
தலைவராகவேண்டி
நச்.உரை

பிரமன் திருமால் உருத்திரன் இந்திரன் எனப்படும் நான்கு பெரும் தெய்வங்களிலே வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள
உலகத்தை ஓம்புதல் தொழில் ஒன்றையே விரும்பும் கோட்பாடுடைய
பலராலும் புகழப்படுகின்ற அயனை ஒழிந்த ஏனை மூவரும் தலைவராக வேண்டி
பொ.வே.சோ உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *