சொல் பொருள்
மெய்புகுகருவி, கவசம்,
சொல் பொருள் விளக்கம்
மெய்புகுகருவி, கவசம்,
இச்சொல் எட்டுமுறை பதிற்றுப்பத்தில் மட்டும் வருகிறது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
coat-of-mail, armour
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோன்பு புரி தட கை சான்றோர் மெய்ம்மறை – பதி 14/12 வலிமை பொருந்திய பெரிய கையினையுமுடைய படைவீரருக்கு மெய்க்கவசம் போன்றவனே! குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை – பதி 21/24 குவியலான தலைமாலைகளை அணிந்த மழவரின் கவசம் போன்றவனே! வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/8,9 வெண்மையான நிணம் கலந்த ஊன்சோற்றினையும் உணவாகக் கொண்ட மழவர்களின் கவசம் போன்றவனே! ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை – பதி 58/11,12 உயர்ந்த அழகிய மார்பினையும் கொண்ட, சான்றோரின் கவசம் போன்ற, வில்லோர் மெய்ம்மறை – பதி 59/9 வில்வீரர்களுக்குக் கவசம் போன்றவனே! வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ – பதி 65/5 வில்லோருக்குக் கவசமானவனே! தன்னை அடைந்தவருக்குச் செல்வமாயிருப்பவனே! புகாஅர் செல்வ பூழியர் மெய்ம்மறை – பதி 73/12 கார் நகரத்தையுடைய செல்வனே! பூழி நாட்டிலுள்ளவர்களின் கவசம் போன்றவனே! எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறை – பதி 90/27 தம்மிடம் தோற்றவரிடம் போர்க்கு எழாத இரு தோள்களையுடைய பூழியருக்குக் கவசம் போன்றவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்