Skip to content

சொல் பொருள்

மெய்புகுகருவி, கவசம்,

சொல் பொருள் விளக்கம்

மெய்புகுகருவி, கவசம்,

இச்சொல் எட்டுமுறை பதிற்றுப்பத்தில் மட்டும் வருகிறது

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

coat-of-mail, armour

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நோன்பு புரி தட கை சான்றோர் மெய்ம்மறை – பதி 14/12

வலிமை பொருந்திய பெரிய கையினையுமுடைய படைவீரருக்கு மெய்க்கவசம் போன்றவனே!

குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை – பதி 21/24

குவியலான தலைமாலைகளை அணிந்த மழவரின் கவசம் போன்றவனே!

வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை – பதி 55/8,9

வெண்மையான நிணம் கலந்த ஊன்சோற்றினையும் உணவாகக் கொண்ட மழவர்களின் கவசம் போன்றவனே!

ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை – பதி 58/11,12

உயர்ந்த அழகிய மார்பினையும் கொண்ட, சான்றோரின் கவசம் போன்ற,

வில்லோர் மெய்ம்மறை – பதி 59/9

வில்வீரர்களுக்குக் கவசம் போன்றவனே!

வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ – பதி 65/5

வில்லோருக்குக் கவசமானவனே! தன்னை அடைந்தவருக்குச் செல்வமாயிருப்பவனே!

புகாஅர் செல்வ பூழியர் மெய்ம்மறை – பதி 73/12

கார் நகரத்தையுடைய செல்வனே! பூழி நாட்டிலுள்ளவர்களின் கவசம் போன்றவனே!

எழாஅ துணை தோள் பூழியர் மெய்ம்மறை – பதி 90/27

தம்மிடம் தோற்றவரிடம் போர்க்கு எழாத இரு தோள்களையுடைய பூழியருக்குக் கவசம் போன்றவனே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *