சொல் பொருள்
வலிமையுடையவன்
சொல் பொருள் விளக்கம்
விலங்கு, ஊர்வனவற்றின் குட்டி, இளைஞன், ஆண்மகன், கணவன், வீரன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strong man, Young of an animal or reptile, young man, man, husband, warrior
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாறா மைந்தர் மாறுநிலை தேய முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ அரைசு பட கடக்கும் ஆற்றல் புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/9-12 அறத்துறை மாறாத வீரரது வலியானது கெடுமாறு முரசு முழக்கிச் செய்யும் பெரிய போர்க்களத்தே நெருங்கியவழி ஆரவாரம் உண்டாக பகை மன்னர் தம்வலி முற்றவும் அழியப்பொருது வென்றி பெறும் ஆற்றலால் உயர்வமைந்த வலியினை உடையோனே நீ நின் தானையைப் பாதுகாப்பதினால் நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர் சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப உதிர்த்த சுனையின் எடுத்த தலைய அலர் முகிழ் உற அவை கிடப்ப தெரி மலர் நனை உறுவ ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என ஆங்கு இள மகளிர் மருள – பரி 19/66-74 ஒரு மரக்கொம்பின் கடைசி நுனி விரும்பத்தக்கவகையில் சுனைநீரின்மேல் சாய்ந்திருக்க,மணமிக்க பூங்கொத்துக்களைக் கொண்ட அந்தக் மரக் கொம்பினைப் பிளந்துகொண்டுவரும் இளந்தளிர்களை மரத்தின் மீதேறிய மங்கையர் பறித்து நீரில் உதிர்த்துவிட அவ்வாறு உதிர்க்கப்பட்ட சுனையில் நிமிர்ந்து நிற்கும் தலையினையுடைய மலரும் மொட்டுக்களின் மேல் படியுமாறு அத் தளிர்கள் கிடக்க, இவ்வாறு விரிந்த பூக்கள்மீதும் அரும்புகள்மீதும் பொருந்திக்கிடக்க, ஐந்து தலைகளையும், ஒளிரும் பொறிகளையும் உடைய பாம்பின் மூத்த பிள்ளை அருகில் இருக்கும் ஒன்று, மற்றொன்று அதன் இளம்பிள்ளை என்று அங்கு நீராடும் இளம் மகளிர் மருண்டுநோக்க வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து ஒறுவாய்ப்பட்ட தெரியல் ஊன் செத்து பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம் மறம் புகல் மைந்தன் மலைந்த மாறே – புறம் 271/5-8 அச்சம் தருகிற குருதியில் கலந்து, உருமாறி துணிபட்டுக் கிடந்த நொச்சிமாலையை ஊனென்று கருதி பருந்து கவர்ந்து உயரத்தில்கொண்டுபோகவும் ஆம் கண்டேம், மறத்தை விரும்பும் இளையோன் அணிந்திருந்ததினால் மகளிர் கோதை மைந்தர் புனையவும் மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும் – பரி 20/20,21 மகளிர் சூடிக்கொள்ளும் மரபினவாகிய மாலையை ஆராயாமல் ஆடவர் அணிந்துகொள்ளவும், ஆடவரின் குளிர்ச்சியான மாலைகளை மகளிர் சூடிக்கொள்ளவும் – பொ.வே.சோ.உரை மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் மகளிர் கோதை மைந்தர் மலையவும் – பட் 109,110 கணவர் சூடிய கண்ணியைத் தமது கோதையாக நினைத்து மகளிர் சூடிக்கொள்ளும்படியாகவும் மகளிர் சூடிய கோதையைத் தமது கண்ணியாக நினைத்து மைந்தர் சூடிக்கொள்ளும்படியாகவும் – நச்.உரை மாறா மைந்தர் மாறுநிலை தேய முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ அரைசு பட கடக்கும் ஆற்றல் புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/9-12 அறத்துறை மாறாத வீரரது வலியானது கெடுமாறு முரசு முழக்கிச் செய்யும் பெரிய போர்க்களத்தே நெருங்கியவழி ஆரவாரம் உண்டாக பகை மன்னர் தம்வலி முற்றவும் அழியப்பொருது வென்றி பெறும் ஆற்றலால் உயர்வமைந்த வலியினை உடையோனே நீ நின் தானையைப் பாதுகாப்பதினால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்