Skip to content

சொல் பொருள்

வலிமை, விருப்பம், காம மயக்கம், யானையின் மதம், அறியாமை, பேதைமை

சொல் பொருள் விளக்கம்

வலிமை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

might, strength, desire, Infatuation of love, lust, Must of an elephant, Ignorance, stupidity

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான்
புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல – கலி 53/3,4

வீர உணர்வை மிகுதியாகப் பெற்ற ஒரு வேழம் பகையுணர்வு கொண்ட வலிமையினால்
மற்ற யானைகளைக் குத்தி உருவிய இரத்தக்கரை படிந்த கொம்பினைப் போல

ஏர் அணி அணியின் இளையரும் இனியரும்
ஈரணி அணியின் இகல் மிக நவின்று
தணி புனல் ஆடும் தகை மிகு போர்_கண்
துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின்
அணி அணி ஆகிய தாரர் கருவியர்
அடு புனலது செல அவற்றை இழிவர் – பரி 6/27-32

அழகாக அணிந்த அணியினரான இளையவர்களும், அவருக்கு இனியரான அவரின் காதலியரும்,
நீராடத்தகுந்த ஈரமான அணிகளுடன், விளையாட்டாகச் சண்டையிடுவதை மிகவும் விரும்பி,
குளிர்ந்த புதுப்புனலில் ஆடுகின்ற பொருத்தம் மிகுந்த போரிடும் இடமாக
அந்தத் தெளிந்த ஆற்று நீர் அமைய, ஏற்ற துறையைத் தேர்ந்துகொள்ளும் விருப்பத்துடனே
அணியணியாகிய போரின் முன்னணிப்படையினரைப் போல, தேவையான கருவிகளுடன்,
கரையை இடிக்கும் வெள்ளத்தினூடே செல்ல, தம் அணிகலன்களைக் களைவர்;

மகளிரை மைந்து உற்று அமர்புஉற்ற மைந்தர் – பரி 20/91

மகளிர்மேல் காமமயக்கம் கொண்டு அவரை விரும்பிச் சென்ற ஆடவர்

களிறே
————————- ——————————-
மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே – புறம் 13/5-8

களிறுதான்
————————– ——————————
தன்னை மருவிய பாகரை அறியாது மதம்பட்டது.

மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை
வந்திக்க வார் என – பரி 20/69,70

பேதைமைகொண்டாய் கொடிய சொல்கூறி, இந்த இளம் மயில்போன்ற சாயல் உடையவளை
வணங்க வருவாயாக” என்று சொல்ல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *