சொல் பொருள்
(பெ) நாரை வகை
சொல் பொருள் விளக்கம்
நாரை வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a species of heron
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யானையங்குருகின் சேவலொடு காமர் அன்னம் கரைய அணி மயில் அகவ – மது 674,675 யானையங்குருகு எனும் நாரையின் சேவல்களோடு விருப்பத்தையுடைய அன்னச்சேவல்களும் (தம் பேடைகளை)அழைக்க, அழகிய மயில்கள் கூ யானையங்குருகின் கானல் அம் பெரும் தோடு – குறு 34/5 யானைக்கொக்கு எனப்படும் பறவைகளின் கடற்கரையின் பெருங்கூட்டம் இதனை வண்டாழ்ங்குருகு என்பர் நச்-உம் பொ.வே.சோ-வும் தம் உரைகளில். மேலும் பொ.வே.சோ அவர்கள் தம் உரை விளக்கத்தில், யானையங்குருகு – சக்கரவாகப்புள் என்பார். திருப்பாவையுள் கூறப்படும் ஆனைச்சாத்தன் என்பதுவும் இது என்பார் அவர். குஞ்சரக் குரல குருகு எனஒரு பறவை அகநானூற்றில் (145:15) கூறப்படுகிறது. அக்குருகே யானையங்குகுருகாயின் யானையைப் போன்ற குரல் உடைமை பற்றி இப்பெயர் பெற்றது கொள்வதற்கு இடமுண்டு என்பார் உ.வே.சா தம் உரை விளக்கத்தில்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்