Skip to content

சொல் பொருள்

(வி) 1. அகலு, 2.நீங்கு, 3. ஓரிடத்தை விட்டு இன்னோரிடத்துக்குச் செல், 4. இல்லாமல் போ, 5. ஓங்கு, 6. பரவு,

சொல் பொருள் விளக்கம்

மணி முதலியவற்றில் ஊடு நூலைப்புகுத்தி இணை, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be off, go off, go, cease to exist, be tall, spread

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனி – கலி 94/22

“போ! சீச்சீ! அரை மனிதனே! இனி நீ இந்நிலையைக் கைவிடு

தீது நீங்க கடல் ஆடியும்
மாசு போக புனல் படிந்தும் – பட் 99,100

தீவினை போகக் கடலாடியும்,
(பின்னர்)உப்புப் போக (நல்ல)நீரிலே குளித்தும்,

யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர்
மாங்காய் நறும் காடி கூட்டுவேம் யாங்கும்
எழு நின் கிளையொடு போக என்று தத்தம்
கொழுநரை போகாமல் காத்து முழு நாளும்
வாயில் அடைப்ப வரும் – கலி 109/22-26

ஆடவர் எவருக்கும் இவள் அணங்கான வருத்தும் தெய்வமாக அமைவாள் என்று ஊர்ப்பெண்கள்
மோர் வேண்டாம், புளிப்புக்கு மாங்காய் ஊறுகாயை வைத்துக்கொள்வோம், இந்தப் பக்கமே வரவேண்டாம்,
உன் சொந்தபந்தங்களோடு ஊரைவிட்டுப் போய்விடு என்று அவரவருடைய
கணவன்மாரை வெளியில் போகவிடாமல் காத்துக்கொண்டு நாள்முழுவதும்
வாசலையும் அடைத்துக்கொண்டு இருக்கவேண்டி வரும்.

பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின்
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக
புறங்காலின் போக இறைப்பேன் – கலி 144/45-47

காக்காமல் கைவிட்டவனை நான் தேடிக் கண்டுபிடிக்கும் இடத்தை நீ எனக்கு விட்டுத்தராமலிருந்தால்
பெருகி வரும் கரிய கடலே! நீ வெறும் மணல்வெளியாய்ப் போகும்படி
என் புறங்காலால் உன் நீர் எல்லாம் வற்றிப்போக இறைத்துவிடுவேன்

கள்ளி போகிய களரி அம் பறந்தலை – புறம் 225/7

கள்ளி ஓங்கிய களர் நிலமாகிய பாழ்பட்டவிடத்து

தம் பெயர் போகிய ஒன்னார் தேய – பதி 88/4

தங்கள் புகழை எங்கும் பரப்பிய பகைவராகிய கடம்பர்கள் தம் நிலையில் தாழ்வுற,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *