சொல் பொருள்
(பெ) 1. வேள்வித்தூண், யூபத்தம்பம், 2. தலையற்ற உடல்,
சொல் பொருள் விளக்கம்
வேள்வித்தூண், யூபத்தம்பம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sacrificial post, post to which the sacrificial animalis fastened
headless trunk of a body
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண் வேத வேள்வி தொழில் முடித்ததூஉம் – புறம் 224/8,9 பருந்து விழுங்குவதாகச் செய்யப்பட்ட இடத்து நாட்டிய யூபமாகிய நெடிய கம்பத்து வேதத்தாற் சொல்லப்பட்ட வேள்வியினைச் செய்து முடித்ததுவுமாகிய வீயா சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்ட வியன் களம் பல-கொல் – புறம் 15/20,21 கெடாத தலைமையுடைய யாகங்களை முடித்து தூண் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகள் பலவோ? பிண கோட்ட களிற்று குழும்பின் நிண வாய் பெய்த பேய்மகளிர் இணை ஒலி இமிழ் துணங்கை சீர் பிணை யூபம் எழுந்து ஆட அஞ்சுவந்த போர்க்களத்தான் – மது 24-28 பிணங்களைக் கோத்த கொம்புகளையுடைய ஆண்யானைத் திரளின் நிணத்தைத் தின்ற பேய்மகளிருடைய இணைத்த ஆரவாரம் முழங்குகின்ற துணங்கைக் கூத்தின் சீர்க்குச் செறிந்த குறைத்தலைப்பிணம் எழுந்து ஆட, அச்சந்தரும் போர்க்களத்தின்கண் தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற – பதி 67/10,11 தலை துண்டிக்கப்பட்டதால் எஞ்சி நிற்கும் ஆண்மை ததும்பும் குறையுடலோடு அழகிய வடிவம் இல்லாத பேய்மகள் பார்ப்போருக்கு வருத்தத்தை உண்டாக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்