Skip to content

சொல் பொருள்

(பெ) வசிட்டரின் மனைவியாகிய அருந்ததியின் பெயரிலுள்ள நட்சத்திரம்,

சொல் பொருள் விளக்கம்

வசிட்டரின் மனைவியாகிய அருந்ததியின் பெயரிலுள்ள நட்சத்திரம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Arunthathi, Name of the wife of Vasiṣṭha, considered a paragon of chastity
The scarcely visible star Alcor of the great Bear, supposed to be Arundhati transformed;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வடமீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் – கலி 2/21

அருந்ததி போல் வணங்கி வழிபடக்கூடிய பிறரால் போற்றுதற்குரிய கற்பினையுடைய இவளின்

வடமீன் புரையும் கற்பின் மட மொழி – புறம் 122/8

வடதிசைக்கண் தோன்றும் அருந்ததியை ஒக்கும் கற்பினையும் மெல்லிய மொழியினையுமுடைய

வசிட்டரும் அருந்ததியும் (Mizar and Alcor) சப்தரிசி மண்டலத்தின் ஒரு பகுதியான விண்மீன் குழுவாகும். சப்தரிசி மண்டலம் வடக்கு வானில் இரவு நேரத்தில் மிக எளிதாக அடையாளம் காணக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களில் ஒன்று. வானியலில் வசிட்டர் நட்சத்திரம் மிஸார் எனவும், அருந்ததி அல்கோர் எனவும் அழைக்கப்படுகிறது. சப்தரிசி மண்டலத்தின் முதல் இரண்டு நட்சத்திரங்களான துபே, மெராக்சையும் இணைக்கும் கற்பனைக்கோடு தற்போதுள்ள துருவ நட்சத்திரமான போலாரிஸ்- ஐக் காட்டுகிறது. பூமியின் சுழற்சி அச்சு இதனை நோக்கித் தான் அமைந்துள்ளது. இதனால் மற்ற நட்சத்திரங்கள் பூமியின் நகர்வுக்கு ஏற்ப இடம் மாறினாலும் துருவ நட்சத்திரம் ஒரே இடத்தில் தான் இருக்கும். அருந்ததியும் துருவமீனுக்கு வெகு அருகாமையில் இருப்பதால் ஏறக்குறைய இடமாற்றம் இல்லாமல் இருக்கும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *