சொல் பொருள்
(பெ) 1. சிறுவர் மணல்வீடு கட்டி விளையாடும் விளையாட்டு, 2. சிறுவர் கட்டி விளையாடும் மணல்வீடு , 3. ஆற்றுநீர் முதலியவை ஒதுக்கிவிட்ட வளமான மண், 4. நீர் முதலியவற்றினடியில் மண்டிய பொடிமண்,
சொல் பொருள் விளக்கம்
சிறுவர் மணல்வீடு கட்டி விளையாடும் விளையாட்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
children’s game of making toy-houses out of wet fine sand, toy-houses made by children out of wet fine sand, Earth washed ashore by a river, lake etc, silt, sediment
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இளையோர் வண்டல் அயரவும் முதியோர் அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும் – பொரு 187,188 இளையோர் மணல்வீடு(கட்டி) விளையாடவும், முதியோர் (நீதி வேண்டி)அவைக்களம் புகும்பொழுதிலேயே பகையின் மாறுபாடு (அகன்று அன்பு)கொள்ளவும், மணல் காண்-தோறும் வண்டல் தைஇ – நற் 9/8 மணல் கண்டவிடமெல்லாம் சிறுவீடுகட்டி மகிழ்ந்து விளையாடி தண் புனல் வண்டல் உய்த்து என உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – ஐங் 69/3,4 குளிர்ந்த வெள்ளநீர், தன் மணல்வீட்டை அழித்துவிட்டதாகத் தன் மையுண்ட கண்கள் சிவந்துபோகும்படி அழுதுகொண்டிருந்தாள் சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த வண்டல் பாவை வன முலை முற்றத்து ஒண் பொறி சுணங்கின் ஐது பட தாஅம் – நற் 191/1-4 சிறிய பூக்களைக் கொண்ட ஞாழலின் தேன் செறிந்திருந்த ஒளிரும் பூங்கொத்துக்கள் அழகிய அணிகலன்களை அணிந்த மகளிர் நெடிய மணலில் செய்த வண்டல்மண்ணால் ஆன பாவையின் அழகிய முலைகளின் பரப்பில் ஒளிரும் புள்ளிகளையுடைய சுணங்கைப் போல மெல்லிதாகப் பரவிவிழும் நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட – பரி 6/18 முலைகளில் அணிந்த குங்குமக் குழம்பும் மிகுதியாய் வண்டல் போன்று படிந்து தோன்ற,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்