Skip to content

வத்தல் வதக்கல்

சொல் பொருள்

வத்தல்(வற்றல்)- வற்றி உலர்ந்து போனது வத்தல். (வற்றல்)
வதக்கல் – சற்றே வற்றி சற்றே ஈரப்பதம் உடையது வதக்கல்.

சொல் பொருள் விளக்கம்

உலரப் போட்ட மிளகாடீநு வற்றல் நன்றாக உலர்ந்தும் உலரமாலும் இருந்தால் ‘ வத்தலும் வதக்கலுமாக’ இருக்கின்றதென்பர். நீர்ப்பதன் முழுவதும் போக்காமல் ஓரளவு போக்குதலை ‘வதக்குதல்’ என்பது வழக்கம். ஈர உள்ளி அல்லது ஈர வெண்காயம் வதக்குதல் அறிக. மொறுமொறுப்பின்றி ஈரப்பதனுடையதைத் தின்பார் ‘வதக்கு வதக்கு’ என்றிருப்பதாகக் கூறுவதும் எண்ணத் தக்கது.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *