Skip to content

சொல் பொருள்

(பெ) புதியவர், வழிப்போக்கர்,

சொல் பொருள் விளக்கம்

புதியவர், வழிப்போக்கர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Newcomer, stranger Wayfarer

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின் – அகம் 15/6

பொருள் இன்றி வரும் புதியவர்களைப் புரக்கும் நற்பண்பினையுடைய

கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர்
துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின் – கலி 4/4,5

கவர்ந்து கொள்ளக்கூடிய பொருள் இல்லாதவரெனினும், அவ்வழி வரும் புதியவர்
துடித்து வருந்துவதைக் கண்டு மகிழ்வதற்காக, அவரை விரட்டி அவரின் உயிரைக் கவர்வதால்,

ஆறு செல் வம்பலர் காய் பசி தீர
சோறு அடு குழிசி – பெரும் 365,366

வழிச்செல்கின்ற புதியோருடைய மிக்க பசி தீரும்படி
(அவர்)சோற்றை ஆக்குகின்ற பானை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *