Skip to content

சொல் பொருள்

(ஏ.வி) வாரும்,

சொல் பொருள் விளக்கம்

வாரும்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

welcome

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கதுமென கரைந்து வம் என கூஉய் – பொரு 101

விரைவாக அழைத்து, ‘வருக வருக’ என்று உரத்துச் சொல்லி,
– தம் என்பது தாரும் என நின்றாற்போல வம் என்பது வாரும் என்னும் பொருட்டாய் நின்றது- நச்-உரை விளக்கம்

திதலை அல்குல் நலம் பாராட்டிய
வருமே தோழி வார் மணல் சேர்ப்பன்
இறை பட வாங்கிய முழவு முதல் புன்னை
மா அரை மறைகம் வம்-மதி – நற் 307/4-7

உன் தேமல் படர்ந்த அல்குலின் அழகைப் பாராட்டுவதற்கு
வருகின்றான் தோழி! நீண்ட மணல் பரந்த நெய்தல்நிலத் தலைவன்!
நம் வீட்டுக் கூரையின் சாய்ப்பில் படுமாறு வளைந்த முழவு போன்ற அடியையுடைய புன்னையின்
கரிய அடிப்பகுதியில் மறைந்துகொள்வோம் வா!

பாடுகம் வம்-மினோ பரிசில்_மாக்கள் – புறம் 32/6

அவனைப் பாடுவோமாக வாரீர், பரிசில் மக்களே

மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த
அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற
வெம் சுரம் இறந்த அம்_சில்_ஓதி
பெரு மட மான் பிணை அலைத்த
சிறு நுதல் குறு_மகள் காட்டிய வம்மே – ஐங் 394

மாண்பு சிறிதும் இல்லாத நெறிமுறையோடு, மனம் கலங்க இன்னல் செய்த
அன்பே இல்லாத தருமமும் எனக்கு அருள்செய்வதாயிற்று, உண்மையாய் –
வெப்பமிக்க பாலை வழியில் சென்ற என் அழகிய சிலவான கூந்தலையுடைய,
பெரிதான பேதைமையால் பெண்மானையே நிலைகெடச்செய்யும்,
சிறிய நெற்றியையுடைய என் இளையமகளை என் கண்முன் காட்டிற்று, வந்து பாருங்கள்.

அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி
பகலும் வருதி பல் பூ கானல்
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள்
அலரின் அரும் கடிப்படுகுவள் அதனால்
எல்லி வம்மோ மெல்லம்புலம்ப – நற் 223/2-6

அன்பு பெரிதாக உடைமையினாலே இவளுக்குக் கருணைகாட்டல் வேண்டி
பகலிலும் வருகிறாய்; பலவான பூக்களைக் கொண்ட இந்தக் கடற்கரைச் சோலையில்
இத்தன்மையராக இருத்தல் இனிதே! எனினும் இவள்
ஊராரின் பழிச்சொல்லுக்கு ஆளாகி அரிய கட்டுக்காவலுக்குட்படுத்தப்படுவாள்; அதனால்
இரவானபின் வருவாயாக, மென்புலமான நெய்தல்நிலத் தலைவனே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *