Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வலிமை, 2. புலி, 3. வெற்றி, 4. மூலம், வழி,

சொல் பொருள் விளக்கம்

வலிமை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

power, might, tiger, victory, Means, agency

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ் கடுங்கண்
இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் – கலி 65/23,24

அடக்கமுடியாத வலிமையினையும், வளைந்த வரிகளையும், கொடிய குணமும் கொண்ட
பெரிய புலியைப் பிடிப்பதற்கு விரித்த வலையினில்

வரி வயம் பொருத வய களிறு போல – புறம் 100/7

வரிகளையுடைய புலியொடு பொருத வலிய யானையை ஒப்ப
– வரி வயம் -வரிகளையுடைய புலி – ஔவை.சு.து.உரை, விளக்கம்.

வயம் படு பரி புரவி மார்க்கம் வருவார் – பரி 9/51

வெற்றிக்குக் காரணமான ஓட்டத்தையுடைய குதிரைகளின் நடையினைக் கொண்டனர்,

அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும்
குருகு இரை தேர கிடக்கும் பொழி காரில்
இன் இளவேனில் இது அன்றோ வையை நின்
வையை வயம் ஆக வை – பரி 6/75-78

“அருகில் உன் ஊர் இருந்தும், வைகையின் நீர்ப்பெருக்கினால் தெப்பத்தில் வருவதனால் அது உன்னைத்
தாமதப்படுகின்றது,
குருகினங்கள் இரை தேடுமளவுக்கு வைகையில் நீர் வற்றிக்கிடக்கின்றது, முறையே, பொழிகின்ற
கார்காலத்திலும்,
இனிய இளவேனிகாலத்திலும்; இத்தன்மை உடையதன்றோ வையை, உன்னுடைய காமமும்
வையையின் வழிப்பட்டதே என்று கொள்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *