Skip to content

சொல் பொருள்

(பெ) பசலைக்கொடி,

சொல் பொருள் விளக்கம்

பசலைக்கொடி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

purslane

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இந்தக் கொடியை வீட்டில் வளர்ப்பர். பசுக்கள் இதனை விரும்பி உண்ணும்.

இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என – நற் 179/1

வீட்டில் முளைத்தெழுந்த வயலைக்கொடியை ஈற்றுப்பசு தின்றுவிட

மனை நடு வயலை வேழம் சுற்றும் – ஐங் 11/1

வீட்டில் நடப்பட்ட வயலைக்கொடி வெளியிற் சென்று கொறுக்கச்சியைச் சுற்றிக்கொண்டிருக்கும்

இதன் காய் பச்சையாக இருக்கும். கொடி சிவப்பு நிறத்தில் இருக்கும்.

புயல் புறந்தந்த புனிற்று வளர் பைம் காய்
வயலை செம் கொடி களவன் அறுக்கும் – ஐங் 25/1,2

மழையினால் பேணி வளர்க்கப்பட்ட இளமையான வளர்கின்ற பச்சையான காயையுடைய
வயலையின் சிவந்த கொடியை நண்டு அறுத்துச் செல்லும்

வயலை செம் கொடி பிணையல் தைஇ – ஐங் 52/1

வயலையின் சிவந்த கொடியைப் பிணைத்து மாலையாகக் கட்டியதால்

வயலைக்கொடி வேலியிலும் படர்ந்திருக்கும்

வயலை வேலி வியலூர் அன்ன நின் – அகம் 97/13

வயலைக் கொடி படர்ந்த வேலியினையுடைய வியலூரினைப் போன்ற

வயலைக் கொடியினால் ஆம்பல் மலர்களைச் சேர்த்துக்கட்டித் தழையுடையாக மகளிர் அணிந்துகொள்வர்.

மனை நகு வயலை மரன் இவர் கொழும் கொடி
அரி அலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ – அகம் 176/13,14

மனையின்கண் விளங்கும் மரத்தில் படரும் கொழுவிய வயலைக் கொடியினை
விளங்கும் மலர்களையுடைய ஆம்பலொடு சேர்த்துக்கட்டிய தழையுடையை உடுத்து

இந்த வயலைக்கொடியைப் பந்தல்போட்டு வளர்த்தனர்.

ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி – அகம் 275/1-3

உயர்ந்த நிலையினதாகிய தாழியில் நிறைய அடைவித்து
பனங்குடையால் முகந்த நீரினை சொரிந்து வளர்த்த
வயலைக் கொடி படர்ந்த பந்தலில் பந்தினை எறிந்து விளையாடி

வாடிய வயலைக்கொடி போல் பார்ப்பான் ஒருவனின் மருங்குல் (அடிவயிறு) இருந்ததாம்

வயலை கொடியின் வாடிய மருங்கின்
உயவல் ஊர்தி பயலை பார்ப்பான் – புறம் 305/1,2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *