Skip to content

சொல் பொருள்

1. (பெ) 1. இடம்,  2. பக்கம், 3. பக்குவம், பதம், 4. முறை, 

2. (இ.சொ) இடம் என்னும் பொருள்படும் ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு.,

சொல் பொருள் விளக்கம்

இடம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

place, side, proper stage, as in boiling rice, order, Sign of the locative with meaning ‘in’, ‘with’

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வாவலும் வயின்தொறும் பறக்கும் சேவலும்
நகை வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும் – நற் 218/3,4

வௌவாலும் இடங்கள்தோறும் பறந்து திரியலாயின; ஆந்தைச் சேவலும்
மகிழ்ச்சி மிகப்பெற்று, தனது பேடை நகுவதுபோல கூவுந்தோறும் அதனை அழைக்கும்;

புடை வீழ் அம் துகில் இட வயின் தழீஇ – நெடு 181

பக்கவாட்டில் (நழுவி)வீழ்ந்த அழகிய மேல் துண்டை இடப்பக்கத்தே அணைத்துக்கொண்டு

வளை கை மகடூஉ வயின் அறிந்து அட்ட
சுடர் கடை பறவை பெயர் படு வத்தம் – பெரும் 304,305

வளையலை அணிந்த கையினையும் உடைய பார்ப்பனி பதமறிந்து ஆக்கிய
ஞாயிறு பட்ட காலத்தே, பறவையினது பெயரைப் பெற்ற கருடன் சம்பா என்னும் நெல்லின் சோற்றையும்,

வகை சால் உலக்கை வயின்வயின் ஓச்சி – கலி 40/5

சிறப்புப் பொருந்திய உலக்கைகளை முறை முறையாக(மாற்றி மாற்றி)க் குற்றி,

அம்ம வாழி தோழி நம்வயின்
நெய்த்தோர் அன்ன செவிய எருவை
கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும்
காடு நனி கடிய என்ப – ஐங் 335/1-4

தோழியே! கேட்பாயாக! நம்மிடம் –
இரத்தம் போலச் சிவந்த செவியை உடைய கழுகுகள்
மலையின் பக்கவாட்டுப் பகுதியில் கடுமையான முடைநாற்றத்தைக் கொண்ட பிணங்களைப்
பார்த்துக்கொண்டிருக்கும்
– காட்டுப்பகுதி மிகவும் கடுமைகொண்டது என்பார்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *