சொல் பொருள்
(பெ) கூத்தர்,
சொல் பொருள் விளக்கம்
கூத்தர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
professional dancers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இவர்கள் ஊர்களில் நடக்கும் திருவிழாக்களில் ஆடுவார்கள் விழவின் ஆடும் வயிரியர் மடிய – மது 628 திருநாளின்கண் கூத்தாடும் கூத்தர் துயில்கொள்ள, இவர்கள் அரசர்களிடம் சென்று, பாடியும் ஆடியும் அவர்களை மகிழ்வித்து, அவர்களிடமிருந்து பரிசில் பெறுவர் பாணர் வருக பாட்டியர் வருக யாணர் புலவரொடு வயிரியர் வருக என இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் கொடுஞ்சி நெடும் தேர் களிற்றொடும் வீசி – மது 749-752 ‘பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக, புது வருவாயினையுடைய புலவரோடு கூத்தரும் வருவாராக’, என்று அழைத்து (தம்)பெரிய சுற்றத்தாரைப் பேணி ஆதரிக்கும் பரிசிலர்க்கெல்லாம் கொடுஞ்சியையுடைய நெடிய தேர்களை யானைகளோடும் வழங்கி, இவர்கள் ஆடும்போது நிறையக் கள்ளினைக் குடிப்பர். நிரம்பு அகல்பு அறியா ஏறா_ஏணி நிறைந்து நெடிது இரா தசும்பின் வயிரியர் உண்டு என தவாஅ கள்ளின் வண் கை வேந்தே நின் கலி மகிழானே – பதி 43/33-36 நிரம்புதலும் அகலுதலும் இல்லாத, கோக்காலியின் மேல் வைக்கப்பட்டுள்ள நீண்ட நேரம் நிறைந்து இருப்பதை அறியாத குடங்களிலிருக்கும், கூத்தரும் பாடகரும் உண்டபோதும் குறையாத, கள்ளினையுடைய வளமையான கொடையினையுடைய வேந்தனே! உன்னுடைய மகிழ்ச்சிமிக்க அரசவையில் இவர்கள் பொய்பேசி அறியாதவர்கள். செயிர் தீர் நாவின் வயிரியர் – அகம் 155/13 குற்றமற்ற நாவினையுடைய கூத்தர் இவர்கள் யாழையும் முழவையும் இசைத்து ஆடுவர். பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ் மண் அமை முழவின் வயிரியர் – புறம் 164/11,12 பண்ணுதலமைந்த நரம்பினையுடைய தோலால் போர்க்கப்பட்ட நல்ல யாழையும் மார்ச்சனை நிறைந்த மத்தளத்தினையும் உடைய கூத்தர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
அருணகிரிநாதர் தன்னுடையத்திருப்புகழிலும் (1255) தோரணகனக திருப்புகழ் பாடலிலும் வயிரியர் என்ற சொல்லை ஆட்சி செய்துள்ளார்