சொல் பொருள்
பெ) 1. எல்லை, உயரளவு, 2. வயல் வரப்பு,
சொல் பொருள் விளக்கம்
எல்லை, உயரளவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Boundary, limit, extent, ridge of a field
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை – அகம் 109/8 எண்ணின் எல்லை அறியலாகாத தழையிட்டு மூடிய பதுக்கைகளையுடைய கழனி நெல்லின் கவை முதல் அலங்கல் நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர – அகம் 13/19,20 வயல் நெல்லின் பலவாகக் கிளைத்த முதலிலிருந்து தோன்றிய நெற்கதிர் நிரம்பிய அகன்ற வயலினிடத்து வரப்புகளை அணையாகக் கொண்டு கிடந்து அசைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்