சொல் பொருள்
(பெ) ஓட்டுநன், செலுத்துநன், பாகன்,
சொல் பொருள் விளக்கம்
ஓட்டுநன், செலுத்துநன், பாகன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
driver, charioteer
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புணரி பொருத பூ மணல் அடைகரை ஆழி மருங்கின் அலவன் ஓம்பி வலவன் வள்பு ஆய்ந்து ஊர நிலவு விரிந்தன்றால் கானலானே – நற் 11/6-9 அலைகள் மோதிய குறுமணல் அடைந்துகிடக்கும் கரையினில் சக்கரத்தின் கீழ் நண்டுகள் சிக்கிக்கொள்வதைத் தவிர்த்து பாகன் தன் கடிவாளத்தை ஆய்ந்து செலுத்தும் அளவுக்கு நிலவொளியும் பரந்துள்ளது இக் கடற்கரைச் சோலையில் மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் வாள் முக பாண்டில் வலவனொடு தரீஇ – சிறு 259,260 குதிரையின் செலவினைப் பின்னே நிறுத்தும் வலிமையுள்ள கால்களையும், ஒளியுள்ள முகத்தினையும் உடைய காளையை (அதனைச் செலுத்தும்)பாகனோடு, கொடுத்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்