Skip to content

சொல் பொருள்

1. (வி.அ) சீக்கிரமாக,

2. (பெ) 1. வலிமை 2. திறமை,  3. சூதாடு கருவி,

3. (பெ.அ) 1. மிகுந்த, கடுமையான, 2. அரிதும் சிறிதுமான, 

சொல் பொருள் விளக்கம்

சீக்கிரமாக,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

quickly, strength, power, ability, dice, excessive, severe, rare and little

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நிலை துறை வழீஇய மதன் அழி மாக்கள்
புனல் படு பூசலின் விரைந்து வல் எய்தி – மலை 280,281

வழக்கிலுள்ள துறையைத் தவறவிட்ட(வேறு துறையில் புகுந்து,திரும்பிவர முயன்று, முடியாத)வலிமை குன்றிய
மக்கள் நீரில் சிக்கிய கூச்சலைக் கேட்டதைப் போல் (உம் இசையைக்கேட்டு)வேகமாக ஓடிவந்து சீக்கிரமாய் (உம்மைக்)கிட்டி,

கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர் – திரு 194

கொடிய தொழிலையுடைய வலிமையுடைய வில்லால் கொல்லுதலைச் செய்த குறவர்

பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல்
கோள் வல் பாண்_மகன் – பெரும் 283,284

பச்சை இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய
(மீனைக்)கொள்ளுதலில் திறமையுள்ள பாண்மகனுடைய

நரை மூதாளர் நாய் இட குழிந்த
வல்லின் நல் அகம் நிறைய பல் பொறி
கான வாரணம் ஈனும்
காடு ஆகி விளியும் நாடு உடையோரே – புறம் 52/14-17

நரையையுடைய முதியோர் சூதாடும் கருவியை இடுதலால் குழிந்த
அந்தச் சூது கருவியினது நல்ல மனையாகிய இடம் நிறைய பல பொறிகளையுடைய
காட்டுக்கோழி முட்டையிடும்
காடாய்க் கெடும் நாடுடையோர்

வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்ப – பொரு 99

மிகுந்த வறுமையாலுண்டாகிய வருத்தம் பொதிந்த (என்)உள்ளம் உவக்கும்படி

நெடும் கிணற்று
வல் ஊற்று உவரி தோண்டி – பெரும் 97,98

ஆழமான கிணற்றில்
சில்லூற்றாகிய உவரிநீரை முகந்துகொண்டு,
– வல்லூற்று என்றது, அரிதில் சிறிதே ஊறும் ஊற்று என்றவாறு – பொ.வே.சோ உரை விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *