சொல் பொருள்
(பெ) 1. பெருமை, பெரிய தன்மை, 2. வளமை, செழிப்பு, 3. கூர்மை, 4. வார், 5. வண்மை, வள்ளன்மை,
சொல் பொருள் விளக்கம்
பெருமை, பெரிய தன்மை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
largeness, bigness, fertility, fecundity, sharpness, lash, thong, liberality, munificence
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி – திரு 8 ஒளியையுடைய ஞாயிறும் திங்களும் இருளை நீக்கும் வானிடத்தே பெருமையுடைய துளியை முற்படச் சிதறி – வாள் – ஒளி – ஈண்டு ஞாயிற்றையும் திங்களையும் குறிப்பதால் ஆகுபெயர் என்க – நச். பொ.வே,சோ விளக்கம் வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய – மலை 334 வளவிய இதழையுடைய குளவியும், குறிஞ்சியும் வாடும்படி முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு – அகம் 362/5 செம்முருக்கின் அரும்பினை ஒத்த கூரிய நகத்தினையுடைய வலிய பெண்புலி வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை – புறம் 399/23 வார் அறுப்புண்டு கிடந்த என் தெளிந்த கண்ணையுடைய மாக்கிணையை மழவர் பெருமகன் மா வள் ஓரி – நற் 52/9 வீரர்களின் தலைவனான, மிகுந்த வள்ளன்மையுள்ள ஓரியின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்