Skip to content

சொல் பொருள்

(வி) 1. போற்று, 2. பணிந்துபேசு, 3. வணங்கிப்பேசு,

சொல் பொருள் விளக்கம்

போற்று,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

praise, eulogise, talk submissively, talk with reverence

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி – பதி 24/8

அறச்செயல்களை விரும்பும் அந்தணர்களை வழிபட்டு நடந்து,
– ஔவை.சு.து.உரை

உண் கடன் வழிமொழிந்து இரக்கும்_கால் முகனும் தாம்
கொண்டது கொடுக்கும்_கால் முகனும் வேறு ஆகுதல்
பண்டும் இ உலகத்து இயற்கை – கலி 22/1-3

உண்பதற்குரிய பொருளைப் கடனாகப் பெறப் பணிந்து பேசி, இரந்து கேட்கும்போது இருக்கும் முகமும், தாம்
வாங்கிக் கொண்டதைத் திருப்பிக் கொடுக்கும்போது இருக்கும் முகமும் வேறுபடுதல்
பண்டைக் காலத்திலும் இந்த உலகத்துக்கு இயற்கை,
– வழிமொழிந்து – பணிவாகப் பேசி – மா.இரா.உரை விளக்கம்
– வழிமொழிந்து – வழிபாடாகச் சொல்லி – நச்.உரை
– வழிமொழிந்து இரத்தலாவது – கடன் கொடுப்போர் கருத்தறிந்துஅவர் கருத்திற்கியைவன பேசிக் கடன் கேட்டல்
– பொ.வே.சோ விளக்கம்

வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து
சென்றீக என்ப ஆயின் – அகம் 124/2,3

(பகைவர்) வந்து திறை கொடுத்து வணங்கி, பணிமொழிகூறிச்
சென்றருள்க என்பாராயின்
– நாட்டார் உரை

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக – புறம் 8/1

உலகத்தைக் காக்கும் அரசர் வழிபாடுசொல்லி நடக்க,
– ஔவை.சு.து.உரை

குன்று மலை காடு நாடு
ஒன்று பட்டு வழிமொழிய – புறம் 17/3,4

குன்றமும் மலையும் காடும் நாடும் என இவற்றையுடையோர்
ஒரு பெற்றிப்பட்டு வழிபாடுகூற
– ஔவை.சு.து.உரை

வலியர் என வழிமொழியலன்
மெலியர் என மீக்கூறலன் – புறம் 239/6,7

இவர் நம்மினும் வலியர் என்று கருதி அவர்க்கு வழிபாடு கூறி அறியான்
இவர் நம்மினும் எளியர் என்று கருதி அவரின் மிகுத்துச் சொல்லியறியான்
– ஔவை.சு.து.உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *