வாடை என்பதன் பொருள்வடக்கு,குளிர்.
சொல் பொருள்
(பெ) 1. குளிர் காற்று, 2. வடக்குக்காற்று,
சொல் பொருள் விளக்கம்
குளிர் காற்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
chill wind, north wind
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிரைத்து நிறை கொண்ட கமம் சூல் மா மழை அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள் இரும் பனி பருவத்த மயிர் காய் உழுந்தின் அகல் இலை அகல வீசி அகலாது அல்கலும் அலைக்கும் நல்கா வாடை – நற் 89/3-7 ஒழுங்காக அமைந்து நிறைவுகொண்ட முற்றிய கருக்கொண்ட கரிய மேகங்கள் மிக்க துளிகளைப் பெய்து ஒழிந்து, ஒழுக்கும் மழையைக் கொண்ட கார்காலத்தின் இறுதிநாளில் பெரும் பனிக் காலத்தில் காய்க்கும் மயிர்கள் அமைந்த காய்களைக் கொண்ட உழுந்தின் அகன்ற இலைகள் சிதையும்படி வீசி, நம்மை விட்டு நீங்காது நாள்தோறும் நம்மைத் துன்புறுத்தும் அன்பில்லாத வாடைக்காற்று வட புல வாடைக்கு பிரிவோர் மடவர் வாழி இ உலகத்தானே – நற் 366/11,12 வடநாட்டிலிருந்து வாடை வீசும் காலத்தில் பிரிந்து செல்வோர் அறிவில்லாதவர் ஆவார், வாழ்க நெஞ்சமே! இந்த உலகத்தில். கூதிரொடு வேறு புல வாடை அலைப்ப துணை இலேம் தமியேம் பாசறையேமே – நற் 341/8-10 கூதிரோடு கலந்து வேற்று நாட்டுள்ள வாடையும் துன்புறுத்துதலால் துணை இல்லாதவ்னாய், தனிமையில் பாசறையில் இருக்கின்றேன் தண் என, வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் – அகம் 78/10 தண்ணென்று, வாடைக்காற்று வீசும் தோன்றுகின்ற பனியையுடைய முன்பனிக்காலத்தில் அல்கலும் அலைக்கும் நல்கா வாடை பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு - நற் 89/7,8 இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில் - நற் 109/6 இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை நினக்கு தீது அறிந்தன்றோ இலமே - நற் 193/4,5 வளரா வாடை உளர்பு நனி தீண்டலின் - நற் 241/4 வாடை பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவே - நற் 312/9 வேறு புல வாடை அலைப்ப - நற் 341/9 தண் வரல் வாடை தூக்கும் - குறு 76/5 ஓம்பு-மதி வாழியோ வாடை பாம்பின் - குறு 235/1 வாடை வந்ததன் தலையும் நோய் பொர - குறு 240/4 மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடை எகால் வருவது என்றி - குறு 277/6,7 வந்த வாடை சில் பெயல் கடை நாள் - குறு 332/1 வருவை அல்லை வாடை நனி கொடிதே - ஐங் 233/1 அரும் பனி கலந்த அருள் இல் வாடை தனிமை எள்ளும் பொழுதில் - ஐங் 479/3,4 வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல் - பதி 61/2 ஒருதிறம் வாடை உளர்_வயின் பூ கொடி நுடங்க - பரி 17/16 வாடை உளர் கொம்பர் போன்ம் - பரி 21/63 நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் - கலி 29/13 வயங்கு இழை தண்ணென வந்த இ அசை வாடை தாள் வலம்பட வென்று தகை நன் மா மேல்கொண்டு - கலி 31/12,13 வாடை தூக்க வணங்கிய தாழை - கலி 128/2 புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை இலங்கு பூ கரும்பின் ஏர் கழை இருந்த - அகம் 13/21,22 வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை - அகம் 24/6 தண் வரல் அசைஇய பண்பு இல் வாடை பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி - அகம் 58/11,12 வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் - அகம் 78/10 அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை - அகம் 96/6 ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே - அகம் 125/22 குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை எனக்கே வந்தனை போறி புனல் கால் - அகம் 163/9,10 பனி கடி கொண்ட பண்பு இல் வாடை மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய - அகம் 235/15,16 கடிது வந்து இறுத்த கண் இல் வாடை நெடிது வந்தனை என நில்லாது ஏங்கி - அகம் 243/8,9 அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை கடி மனை மாடத்து கங்குல் வீச - அகம் 255/15,16
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்