சொல் பொருள்
பெ) 1. ஏவல், 2. வாய்மை பொருந்திய சொற்கள், 3. வேதம், மறை,
சொல் பொருள் விளக்கம்
ஏவல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
order, command, truthful words, scripture
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர் இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப – மது 773,774 (பகைவரை)வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய இளைய பலராகிய கோசர்கள் நடக்கின்ற நெறிமுறைமையால் உன்னுடைய ஏவல் கேட்டு அதன்படி நடக்க, பொய் அறியா வாய்மொழியால் புகழ் நிறைந்த நன் மாந்தரொடு – மது 19,20 பொய்மையே அறியாத (தங்களின்)மெய்மொழியால் புகழ் நிறைந்த நல்ல அமைச்சர்களோடு வரை போல் யானை வாய்மொழி முடியன் – நற் 390/9 மலை போலத் தோன்றும் யானைகளையும், வாய்மையான சொற்களையும் உடைய முடியன் என்பானின் மாயா வாய்மொழி உரைதர வலந்து வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரை பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீ என பொழியுமால் அந்தணர் அரு மறை – பரி 3/11-14 அழிவற்ற வேதங்கள் சொன்னபடி விரிவாக, வேதங்களாகிய ஓடையில் மலர்ந்த தாமரைப் பூவினில் பிறந்தவனாகிய பிரமனும், அவனுடைய தந்தையும், நீயே என்று கூறுகின்றன அந்தணரின் வேதங்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்