Skip to content

சொல் பொருள்

1. (ஏ.வி.மு) வரவேண்டாம், 2. (பெ) 1. கொள்ளையிடுதல் 2. நீளுதல்,

சொல் பொருள் விளக்கம்

வரவேண்டாம், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

don’t come, robing, stealing, being long

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே – குறு 69/5,6

சாரல் நாட்டைச் சேர்ந்தவனே! நள்ளிரவில்
வரவேண்டாம்! நீ வாழ்க! வருந்துகிறோம் நாம்

வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி – நற் 304/1

கொள்ளையிடுதற்குரிய மெல்லிய தினையின் மணம் நிரம்பிய கதிரைக் கொய்துதின்று
– பின்னத்தூரார் உரை

வாரல் மென் தினை புலர்வு குரல் மாந்தி – நற் 304/1

நீளுதலுள்ள மெல்லிய தினையின் மணம் நிரம்பிய கதிரைக் கொய்துதின்று
– வாரல் நீளுதலுமாம் – பின்னத்தூரார் உரை விளக்கம்

தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரி மான் வழங்கும் சாரல் – பதி 12/4,5

பிடரி மயிர் அழகுசெய்யும் கழுத்தினையும், நீண்ட கூரிய நகங்களையும் கொண்ட,
சிங்கங்கள் நடமாடும் மலைச்சாரலில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *