சொல் பொருள்
(பெ.அ) 1. மலர்ந்த, 2. வாய் பிளந்த,
சொல் பொருள் விளக்கம்
மலர்ந்த,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
blossomed, with opened mouth
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் – நற் 238/3 வண்டுகள் கிளறி முறுக்கவிழ்ப்பதனால் மலர்ந்த பிடவ மலர்கள் விண்ட கட கரி மேகமொடு அதிர – பரி 23/51 பிளிறுகின்ற மதயானை மேகத்தின் முழக்கத்தைப் போல் முழங்க, – விண்ட – பிளிறிய ;விள்ளுதல் என்னும் வினையடியாகப் பிறந்த பெயரெச்சம், விள்ளுதல் – திறத்தல் அது வாய்திறத்தல் என்னும் பொருள்பட்டு அதன் காரியமாகிய பிளிற்றொலியை ஈண்டுக் குறித்து நின்றது என்க.- பொ.வே.சோ.உரை விளக்கம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்