Skip to content

சொல் பொருள்

(பெ.அ) 1. மலர்ந்த, 2. வாய் பிளந்த,

சொல் பொருள் விளக்கம்

மலர்ந்த,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

blossomed, with opened mouth

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் – நற் 238/3

வண்டுகள் கிளறி முறுக்கவிழ்ப்பதனால் மலர்ந்த பிடவ மலர்கள்

விண்ட கட கரி மேகமொடு அதிர – பரி 23/51

பிளிறுகின்ற மதயானை மேகத்தின் முழக்கத்தைப் போல் முழங்க,
– விண்ட – பிளிறிய ;விள்ளுதல் என்னும் வினையடியாகப் பிறந்த பெயரெச்சம், விள்ளுதல் – திறத்தல்
அது வாய்திறத்தல் என்னும் பொருள்பட்டு அதன் காரியமாகிய பிளிற்றொலியை ஈண்டுக் குறித்து நின்றது
என்க.- பொ.வே.சோ.உரை விளக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *