சொல் பொருள்
(வி) 1. கேள்விகேள், 2. விசாரி, 3. சொல்வதைக் கேள், செவிமடு,
சொல் பொருள் விளக்கம்
கேள்விகேள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ask, enquire, listen to, pay attention to
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நும் கோ யார் என வினவின் எம் கோ இரு முந்நீர் துருத்தியுள் முரணியோர் தலைச்சென்று கடம்பு முதல் தடிந்த கடும் சின முன்பின் நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி – பதி 20/1-5 உம்முடைய அரசன் யார் என்று கேட்பீராயின், எமது அரசன் கரிய கடலிலுள்ள தீவினுள் வாழ்ந்த, அவனுடன் முரண்பட்டோரை எதிர்த்துச் சென்று, அவரின் காவல் மரமான கடம்பினை அடியோடு வெட்டிச் சாய்த்த மிக்க சினமும், வலிமையும் கொண்ட நெடுஞ்சேரலாதன் ஆவான்; வாழ்க அவன் சூடியிருக்கும் தலைமாலை அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவி சென்மோ வாழி தோழி – நற் 365/4,5 அகன்ற வயல்களையும் தோட்டங்களையும் உடைய அவனது ஊருக்கு வழிகேட்டுப் போவோமா? வாழ்க, தோழியே! புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு புக்க_வழி எல்லாம் கூறு கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை காயாமை வேண்டுவல் யான் – கலி 82/4-7 தேவர்களின் கோவிலை வலம்வந்து பின்னர் என் மகனாகிய இவனோடு நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக”; “சொல்கிறேன், விரும்பிக்கேட்பது போல் கேட்டு அதன் பின்னே வெகுளாதிருக்க வேண்டுகிறேன் நான்”
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்