சொல் பொருள்
(பெ) சங்க வள்ளல்களில் ஒருவன்,
சொல் பொருள் விளக்கம்
விராலி மலைக்குஅடியில் இருக்கும் இருப்பையூர் என்ற ஊரை ஆண்ட வள்ளல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a philanthropist chieftain of sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் தொல் நலம் தொலையினும் தொலைக – நற் 350/4,5 தேர்க்கொடை கொடுப்பதில் சிறந்த விரான் என்பானின் இருப்பையூர் போன்ற என் பழைய அழகு தொலைந்துபோனாலும் போகட்டும் விண்டு அன்ன வெண்ணெல் போர்வின் கைவண் விராஅன் இருப்பை அன்ன இவள் அணங்கு உற்றனை போறி – ஐங் 58/1-3 மலை போலக் குவித்த வெண்ணெல் அறுத்த கதிர்க்குவியல்களையும், கொடைத்தன்மையிலும் சிறந்த விரான் என்பானின் இருப்பை நகரைப் போன்ற இவள்மீது காதல்வேட்கை பெருகித் துன்பப்பட்டாய் போலும்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்