Skip to content

சொல் பொருள்

(பெ) மலை, மலைபோல் நிற்கும் மதில்,

சொல் பொருள் விளக்கம்

மலை, மலைபோல் நிற்கும் மதில்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

mountain, huge wall obstructing like a hill

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்
விலங்கல் மீமிசை பணவை கானவர்
புலம் புக்கு உண்ணும் புரி வளை பூசல் – மலை 297-299

ஒளிர்கின்றதும் ஏந்திநிற்பதுமான கொம்பினையுடைய (தன்)இனத்தைப்பிரிந்த ஒற்றை ஆண்யானை,
குறுக்குமலையில் மிக உயரமான பரண் (மீது இருக்கும்)குறவர்களின்
நிலத்தில் புகுந்து (பயிர்களைத்)தின்ன, (அதனை விரட்ட, அவர்கள்)ஆர்வத்துடன் சுற்றிவளைத்து ஏற்படுத்தும்
ஓசையும்;

கோடு உறழ்ந்து எடுத்த கொடும் கண் இஞ்சி
நாடு கண்டு அன்ன கணை துஞ்சு விலங்கல் – பதி 16/1,2

மலைச் சிகரங்களோடு மாறுபடுவது போன்று கட்டிய, வளைந்த பார்க்குமிடங்களையுடைய வெளிமதிலை
அடுத்துள்ள,
ஒரு நாட்டைக் கண்டது போன்ற அகன்ற இடைவெளியைக் கொண்ட அம்புக்கட்டுகள் இருக்கும் நடுமதிலையும்
அடுத்து,
– புற மதிலைக் கடந்து போதருவார்க்குக் குறுக்கே மலை போல் நிற்றலின் விலங்கல் என்றும் கூறினார்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *