சொல் பொருள்
விலைபோதல் – திறமையால் பெருமையடைதல்
சொல் பொருள் விளக்கம்
திறமையான சிலர் எங்கே போனாலும் செல்வாக்குடன் விளங்குவர். அவரை ‘விலைபோகின்ற சரக்கு அது’ எனப் பாராட்டுவர். நல்ல சரக்காக இருந்தால் தேடி வந்து வாங்கிக் கொள்வது போலத் திறமைக்கு எங்கும் மதிப்பிருக்கும் என்னும் தெளிவில் கூறும் உரை இதுவாம். நல்லமாடு உள்ளூரிலேயே விலைபோகும் என்பர். ஏனெனில் உழைப்பை நேரில் கண்டவர் கேட்கும் விலையைத் தந்து பிடித்துக் கொள்வர் என்பதாம். ஆதலால் விலை போதல் என்பது திறமைக்கு மதிப்புண்டு என்பதை விளக்கும் வழக்காகும்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்