Skip to content

சொல் பொருள்

(வி) 1. விளக்குகளை ஏற்று, 2. ஒளிபெறச்செய், ஒளிரச்செய்,

சொல் பொருள் விளக்கம்

விளக்குகளை ஏற்று,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

light the lamp, brighten, give splendour to

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி – அகம் 141/9

தெருக்களில் விளக்குகளை ஏற்றி, மாலைகளைத் தொங்கவிட்டு

பெரு வரை சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின்
இரவும் இழந்தனள் அளியள் உரவு பெயல் – அகம் 192/12,13

பெரிய மலையிலுள்ள எமது சீறூரின் தெருவினை இருளகற்றி விளங்கச் செய்தலாலே
இரவினுமிழந்தாள் ஆவாள்

தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை
நிலம் விளக்குறுப்ப மே தக பொலிந்து – மது 704,705

பொன்னின் ஒளி சூழ்ந்து குற்றமற்றுத் தகதகக்கும் பேரணிகலன்களால்
நிலம் பிரகாசமடைந்து மேன்மை தகப் பொலிவுபெற்று

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *