சொல் பொருள்
விளக்கெண்ணெய் – வழுக்குதல், சறுக்குதல்
சொல் பொருள் விளக்கம்
விளக்கெண்ணெய், ஆமணக்கு எண்ணெயாம். விளக்கு எரிக்கப் பயன்பட்ட பழங்கால நிலையில் பெற்ற பெயர் அது. விளக்கெரிக்க வேறு எண்ணெய்கள் வந்த பின்னரும், எண்ணெய் இல்லாமலே விளக்கெரியக் கண்ட பின்னரும் விளக்கெண்ணெய்ப் பெயர் விளக்கெண்ணெயே! விளக்கெண்ணெய் பிசு பிசுப்புடையது; வழுக்கல் தன்மை வாய்ந்தது. வழுக்கு மரம் என்னும் போட்டி விளையாட்டுக்கு மரத்தில் தடவப்படும்
எண்ணெய் விளக்கெண்ணெயே. அதனால் விளக்கெண்ணெய் என்பதற்கு வழுக்குதல் சறுக்குதல் என்னும் பொருள்கள் உண்டாயின. இனி, பிடி கொடாமல் வழுக்குபவனும் விளக்கெண்ணெய் எனப்படுவான். உரத்துச் சொல்லாத சொல்லை விளக்கெண்ணெய் என்பதும் வழுக்கல் வழியதே.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்