சொல் பொருள்
(பெ) 1. இரங்கற் பண், 2. ஏழிசையில் ஆறாவது,
சொல் பொருள் விளக்கம்
இரங்கற் பண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
melody-type suited for mourning
The sixth note of the gamut
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்ப – குறு 336/3 சிறிய நாவினையுடைய ஒளிரும் மணிகள் விளரிப்பண்ணைப்போல இசைப்ப – விளரி – இரங்கற்பண்; நெய்தல் நிலத்துக்கு உரியது – உ.வே.சா விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென் – புறம் 291/4 விளரிப்பண்ணைச் சுழற்சியுறப் பாடித் தின்னவரும் குறுநரிகளை ஓட்டுவேன் விளரி நரம்பின் நயவரு சீறியாழ் – அகம் 279/11 விளரி என்னும் நரம்பினது இனிமை பொருந்திய சிறிய யாழின் இசை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்