Skip to content

சொல் பொருள்

(பெ) 1. இரங்கற் பண், 2. ஏழிசையில் ஆறாவது, 

சொல் பொருள் விளக்கம்

இரங்கற் பண்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

melody-type suited for mourning

 The sixth note of the gamut

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்ப – குறு 336/3

சிறிய நாவினையுடைய ஒளிரும் மணிகள் விளரிப்பண்ணைப்போல இசைப்ப
– விளரி – இரங்கற்பண்; நெய்தல் நிலத்துக்கு உரியது – உ.வே.சா

விளரி கொட்பின் வெள் நரி கடிகுவென் – புறம் 291/4

விளரிப்பண்ணைச் சுழற்சியுறப் பாடித் தின்னவரும் குறுநரிகளை ஓட்டுவேன்

விளரி நரம்பின் நயவரு சீறியாழ் – அகம் 279/11

விளரி என்னும் நரம்பினது இனிமை பொருந்திய சிறிய யாழின் இசை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *