சொல் பொருள்
(பெ) 1. தெய்வங்களுக்கு எடுக்கப்படும் திருவிழா, 2. மணவிழா போன்ற இல்ல விழா
சொல் பொருள் விளக்கம்
தெய்வங்களுக்கு எடுக்கப்படும் திருவிழா,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
festival for a deity, festival at home, like marriage
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாடா பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவின் உரு கெழு பெரியோர்க்கு மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார் அந்தி விழவில் தூரியம் கறங்க – மது 457-460 வாடாத பூக்களையும், இமைக்காத கண்ணினையும், அவியாகிய உணவினையுமுடைய அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு, பதிலீடு செய்வதற்கு முடியாத முறைமையை உடைய உயர்ந்த பலிகளைக் கொடுப்பதற்கு, அந்திப் பொழுதின் விழாவில் இசைக்கருவிகள் முழங்க விழவு அறா வியல் ஆவணத்து மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 158-160 விழாக்கோலம் நீங்காத அகன்ற அங்காடித் தெருவினில் – குற்றம் அற்ற சிறப்பினைடைய தெய்வங்களைக் கொண்ட மலர் அணிந்த (கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும் பொன்னுடை நெடு நகர் புரையோர் அயர நன் மாண் விழவில் தகரம் மண்ணி ஆம் பல புணர்ப்ப செல்லாள் – அகம் 385/5-7 செல்வம் மிக்க பெரிய மனையில் மேலோர் மணம் முடித்துவைக்க நல்ல சிறப்புற்ற மணவிழாவில் மயிர்ச்சாந்தினைப் பூசி மற்றும் பொருந்திய பல சிறப்புக்களையும் செய்விக்க மணந்து செல்லாளாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்