சொல் பொருள்
விழுந்து எழுதல் – வறுமைப்பட்டு வளமையாதல்
சொல் பொருள் விளக்கம்
கீழே விழுதலும், விழுந்தவர் காலூன்றியும் கையூன்றியும் எழுதலும் வழக்கே. இவ்வழக்கில் இருந்து பொருள் நிலையில் வீழ்ச்சியடைதல் விழுதலாகவும், பின்னர் அரிதின் முயன்று தேடி நிலை பெறுதல் எழுதலாகவும் சொல்லப்பட்டனவாம். “விழுந்தவன்தான்; மேலும் மேலும் விழுந்தானே அன்றி எழுந்தபாட்டைக் காணோம்” என்பது ஏக்கவுரை. “விழுந்தானா? எழுந்தானா? மாயமாக நடந்துவிட்டது” என்பது வியப்புரை.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்