Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வானுலகத்தார், 2. சிறந்தோர்,  3. பெரும் வீரர்கள்,

சொல் பொருள் விளக்கம்

வானுலகத்தார்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

celestial beings, excellent persons, great warriors

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும்
பகைவர்க்கு அஞ்சி பணிந்து ஒழுகலையே – மது 200,201

உயர்ந்த வானுலகத்துத் தேவரும் (பகைவராய்)வந்தாலும்,
 (அப்)பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து நடக்கமாட்டாய்;

தண் கடல் நாடன் ஒண் பூ கோதை
பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ
விழைவு கொள் கம்பலை கடுப்ப – மது 524-526

குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய
பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு
விரும்புதல் கொண்டு (எழுப்பும்)ஆரவாரத்தை ஒப்ப

களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின்
விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின் – பதி 45/4,5

களிற்றை எறிந்ததால் நுனிமடிந்து கொறுவாய்ப்பட்டுப்போன வேலினைக் கொண்ட
சிறந்த போர்வீரர் சூழ்ந்திருக்கும் அகன்ற இடத்தையுடைய போர்க்களத்தையும் உடைய,

வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய – புறம் 41/2

வேல் நெருங்கிய படையினையுடைய பெரியோர் மாண்டுபோக

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *