Skip to content

சொல் பொருள்

(வி) 1. துன்புறு, 2. இறந்துபடு,

சொல் பொருள் விளக்கம்

துன்புறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be distressed or afflicted, meet death

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நிறை அழிந்து எழுதரு தானைக்கு
சிறையும் தானே தன் இறை விழுமுறினே – புறம் 314/6,7

நிறைக்கு அடங்காது முந்துற்று எழுந்துவரும் பகைவர் படைக்கு
அதனைத் தடுத்து நின்று காக்கும் அணையாய் நிற்பவனும் அவனே, போரில் தன் வேந்தன்
துன்பமுறுங்காலத்தில்

சிறு கண் யானை வேந்து விழுமுறவே – புறம் 316/12

சிறிய கண்களையுடைய யானையையுடையோனாகிய பகை வேந்தன் போரில் இறந்தானாக.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *