Skip to content

சொல் பொருள்

(வி) சிறப்புத்தோன்ற இரு,

சொல் பொருள் விளக்கம்

சிறப்புத்தோன்ற இரு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sit in state or majestically

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து
மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் – திரு 70,71

திருமகள் வீற்றிருந்த குற்றம் தீர்ந்த அங்காடித் தெருவினையும்,
மாடங்கள் மிகுந்திருக்கும் (ஏனைத்)தெருக்களையும் உடைய மதுரையின் மேற்றிசையில் –

வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம் – நற் 84/9

வெயில் நிலைத்திருந்த வெப்பம் அலையிடும் அரிய காட்டுவழியில்

விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண் – பதி 56/1

விழா நடைபெறுகின்ற அகன்ற உள்ளிடத்தைக் கொண்ட ஊரில்

புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெம் சுரம் – அகம் 335/8

வருத்தம் குடிகொண்டுள்ள நிலம் பிளந்த வெவ்விய சுரங்களும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *