Skip to content

சொல் பொருள்

(பெ) சீழ்க்கை, சீழ்க்கையொலி, சீட்டி,

சொல் பொருள் விளக்கம்

சீழ்க்கை, சீழ்க்கையொலி, சீட்டி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

whistle, shrill sound

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கணை விடு புடையூ கானம் கல்லென
மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர – குறி 160,161

அம்பை எய்து, தட்டையை அடித்து ஒலிஎழுப்பி, காடு(முழுவதும்) கல்லெனும் ஓசை பிறக்கும்படி,
(வாயை)மடித்து விடுகின்ற சீழ்க்கையராய், மிக்க ஓசையை உண்டாக்கி (அவ் வேழத்தை)எதிர்த்து நிற்க,

வீளை அம்பின் வில்லோர் பெருமகன் – நற் 265/3

சீழ்க்கை ஒலியுடன் செல்லும் அம்பைக்கொண்ட வில்லோர்களின் தலைவன்

வீளை பருந்தின் கோள் வல் சேவல் – அகம் 33/5

சீட்டி ஒலி எழுப்பும் பருந்தின் (இரையைக் குறிபார்த்துக்)கவர்வதில் திறமைமிக்க ஆண் பறவை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *