சொல் பொருள்
வெங்கன் – வறியன்
சொல் பொருள் விளக்கம்
வெம்மை என்பது வெங்கு எனப்படும். வெம்மை என்பது பசி வெம்மை. தீப்பசி, காய்பசி, கொல்பசி, எனப்பசி குறிக்கப்படுவது கொண்டு பசியின் வெப்பம் புலப்படும். நெருப்பினுள் கண் மூடினாலும் நிரப்பினுள் (வறுமையுள்) கண் மூட முடியாது என்னும் திருக்குறள் வறுமையின் வெம்மையை வளமாக உரைக்கும். “அவன் வெங்கன்” “என்ன வைத்திருக்கிறான்” என்பதில் வெங்கன் வறுமை புலப்படும். இல்லானை எல்லாரும் எள்ளுவர் என்பதற் கு ஏற்ப வெங்கன் என்பது வசைச் சொல்லாகவும் ஆகிவிட்டது. வெங்கன் – வெறுங்கையன்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்