Skip to content

சொல் பொருள்

மிகுதியான சூடாகு,, வாடு, வெம்மைதோன்று, மனம் வெதும்பு,

சொல் பொருள் விளக்கம்

மிகுதியான சூடாகு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be very hot, fade, be dried with heat, enraged, be distressed, anguished, grieve

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க – கலி 13/5

கற்றாழைகளும் வாடிப்போக, மலைகள் மிகுந்த வெம்மையாக, மந்திகள் சோர்ந்துபோக,

வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின் – கலி 10/4

வேரோடு மரம் வாடிப்போகுமாறு ஞாயிற்றின் விரிந்த கதிர்கள் சுடுதலால்

விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி – நற் 287/1

வானத்தைத் தடவும்படியான கோட்டையைப் பகை வெம்மை தோன்ற முற்றுகையிட்டு
– ஔவை.சு.து.உரை

விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றி – நற் 287/1

விசும்பிலே நீண்டுயர்ந்த மதிலை உள்ளிருப்பவர் நடுங்கும்படி முற்றுகைசெய்து
– பின்னத்தூரார் உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *