Skip to content

சொல் பொருள்

வெய்து, துக்கம், 

சொல் பொருள் விளக்கம்

வெய்து, துக்கம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Sorrow, distress

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முத்து உறழ் மணல் எக்கர் அளித்த_கால் முன் ஆயம்
பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள்
அ திறத்து நீ நீங்க அணி வாடி அ ஆயம்
வித்தத்தால் தோற்றான் போல் வெய் துயர் உழப்பவோ – கலி 136/5-8

முத்துப்போன்ற வெண்மணலில் நீ இவளிடம் அன்புசெய்தபோது, சூதாட்டத்தில் முதல் உருட்டில்
பத்து எண்ணிக்கையைப் பெற்றவன் மனத்தைப் போல் மகிழ்ந்து சிறந்தவள்
அவ்வாறு அன்புசெய்வதிலிருந்து நீ விலகிப்போக, தன் அழகெல்லாம் வாடிப்போய், அந்த உருட்டில்
சிறிய எண்ணிக்கையைப் பெற்றுத் தோற்றவனைப் போலக் கொடும் துயரில் வருந்தமாட்டாளோ?

வெய் துயர் உழப்பவோ

வெய்தாகிய வருத்தத்திலேஅழுந்தவோ? – நச்.உரை

வெய் துயர் உழப்பவோ

வெய்யது ஆகிய வருத்தத்தில் அழுந்திடவோ! – அ.மாணிக்கம் உரை

வெய் துயர் உழப்பவோ

 is it to cause her great distress, vaidehi Herbert translation

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *