Skip to content

சொல் பொருள்

செல்வம், பொருள்திரள், வாழ்வின் ஆதாரப் பொருள், வெறுப்பு,

சொல் பொருள் விளக்கம்

செல்வம், பொருள்திரள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wealth, life-spring, hatred, dislike

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பதி 55/4

நிறைந்த அணிகலன்களாகிய செல்வம் தேங்கியிருக்கும் பண்டகசாலைகள்

நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கை
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர் – மது 215,216

நிலம் சுமக்கமாட்டாத நல்ல பல பொருள்திரள்களையும் உடைய,
பயன் அற்றுப்போதலை அறியாத வளம் நிரம்பிய அரண்மனைகளில்

அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை – திரு 263

அந்தணரின் வாழ்வின் ஆதாரப்பொருளே, சான்றோர் புகழும் சொற்களின் ஈட்டமாயிருப்பவனே,

பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை – பதி 65/11

பாணர்களின் பாதுகாவலனே! பரிசிலர் வாழ்வின் ஆதாரப்பொருளே!

தாது உண் வெறுக்கைய ஆகி இவள்
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே – ஐங் 93/4,5

தேனுண்ணுவதை வெறுத்தனவாகி, இவளின்
அரும்பாக இருந்து அப்போதுதான் மலர்ந்த பூக்களுள்ள தலையுச்சியை மொய்க்கின்றன வண்டுக்கூட்டம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *