சொல் பொருள்
நீர்ப்பெருக்கு, மிகுதி, ஒரு பேரெண்
சொல் பொருள் விளக்கம்
நீர்ப்பெருக்கு
மிகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
flood, abundance, plentitude, a large number
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும் – பரி 11/52,53 பறவை போல் விரையும் குதிரைகளையும், பொன்னாலான முகபடாம் அணிந்திருக்கும் யானைகளையும் வெள்ள நீர்ப் பெருக்கினுள் மேலும் மேலும் செலுத்தி நீரைக் கலக்குவோரும், வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த – அகம் 346/21 மிக்க சேனையுடன் வேற்றுப்புலத்தே போர்செய வந்து தங்கியிருந்த ஆயிர வெள்ள ஊழி வாழி ஆத வாழிய பலவே – பதி 63/20,21 ஆயிரம் வெள்ளம் என்ற எண்ணளவும் சேர்ந்த ஊழிகள் பல வாழ்க! வாழியாதனே! வாழ்க!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்