Skip to content

சொல் பொருள்

நீர்ப்பெருக்கு, மிகுதி, ஒரு பேரெண்

சொல் பொருள் விளக்கம்

நீர்ப்பெருக்கு

மிகுதி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

flood, abundance, plentitude, a large number

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புள் ஏர் புரவி பொலம் படை கைம்_மாவை
வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு_ஊர்பு உழக்குநரும் – பரி 11/52,53

பறவை போல் விரையும் குதிரைகளையும், பொன்னாலான முகபடாம் அணிந்திருக்கும் யானைகளையும்
வெள்ள நீர்ப் பெருக்கினுள் மேலும் மேலும் செலுத்தி நீரைக் கலக்குவோரும்,

வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த – அகம் 346/21

மிக்க சேனையுடன் வேற்றுப்புலத்தே போர்செய வந்து தங்கியிருந்த

ஆயிர வெள்ள ஊழி
வாழி ஆத வாழிய பலவே – பதி 63/20,21

ஆயிரம் வெள்ளம் என்ற எண்ணளவும் சேர்ந்த ஊழிகள் பல
வாழ்க! வாழியாதனே! வாழ்க!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *